• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைத்தளத்தால் பிரச்சனையைச் சந்தித்த காவலர்.

March 21, 2016 indiatimes.com

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், காவலர் ஒருவர் டெல்லி மெட்ரோ ரயிலில் போதையில் தடுமாறுவது போல ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் இருப்பது சலீம்(50) என்ற காவலர் ஆவார். அவர் தடுமாறி விழுவதை வீடியோ எடுத்த மக்கள் அவர் குடிபோதையில் ஒழுங்கற்ற முறையில் நடந்தார் என்று ஏளனம் செய்தனர். இதனால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் தான் மது அருந்தவில்லை எனவும் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் தான் அது போல நடந்தது எனவும் எத்தனை முறை கூறியும் அதை ஏற்க மறுத்த காவல்துறை அவரைப் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் தொடுத்த வழக்கு மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணை ஆகியவற்றில் சம்பவம் நடந்த அன்று அவர் மது அருந்தவில்லை என்று உறுதியானது. இதையடுத்து அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டனர்.

இதையடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்து தீவிர விசாரணை செய்த பிறகே அரசோ அல்லது மற்ற நிர்வாகமோ ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து சமூக வலைத்தாலத்தின் மிகவும் மோசமான அவதூற்றின் காரணமாக தான் மிகவும் கஷ்டப்பட்டதாக உச்ச நீதி மன்றத்தில் சலீம் தெரிவித்துள்ளார்.

தற்போது, சரியான உண்மை சார்ந்த நிலையை வெளியிடுவதன் மூலம் இழந்த கண்ணியத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள உதவ வேண்டும் என்று டெல்லி அரசு, போலீஸ் கமிஷனர், தில்லி மெட்ரோ ரயில் மாநகராட்சி, மற்றும் இந்திய பிரஸ் கவுன்சில்லை கேட்டுக்கொண்டார். மேலும், நிரந்தரமாகத் தனது நற்பெயரைச் சேதப்படுத்திய காவல்துறை தனக்கு இழப்பீடு தரவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்தக் காணொளி வைரலாக பரவி, சலீம் பணியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி செய்தித்தாளில் முன் பகுதியில் வெளியானது. அவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்ட பிறகு அதைக் குறித்து ஒரு செய்தி நிறுவனமோ அல்லது தொலைக்காட்சியோ எந்தச் செய்தியும் வெளியிடவில்லை.

சமுதாயத்தின் பார்வையில் அவர் மது அருந்தி மெட்ரோவில் பயணம் செய்தார் என்றும் அவர் இன்றும் பணி நீக்கத்தில் இருக்கிறார் என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று சலிமின் வக்கீல் வில்ஸ் மதேவ்ஸ் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சலிமின் மனைவிக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பக்கவாதத்தால் அவதியுறும் அவருடைய தந்தை மேலும் அவதியுற்றார் என்று வில்ஸ் கூறினார்.

மேலும் படிக்க