• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திராயன் விண்கலம் வெற்றி பெற கோவையில் மஹா யாகம்

September 9, 2019 தண்டோரா குழு

சந்திராயன் விண்கலம் வெற்றி பெற வேண்டி கோவையில் மஹா யாகம் நடைபெற்றது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.கடந்த 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.மேலும் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக கடந்த7 ஆம் தேதி தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து இருந்த நிலையில் சிறிய பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சந்திராயன் விண்கலம் தரை இறக்கப்பட்டு ஆய்வு செய்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைமையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் முன்பு மஹா யாக பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் ஆர்எஸ்எஸ் மகேஷ் ,சிவஜோதி, சிவமுத்து மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க