• Download mobile app
17 Jun 2019, MondayEdition - 1223
FLASH NEWS
  • பாகிஸ்தான் மீதொரு மற்றொரு துல்லிய தாக்குதல் : உலகக் கோப்பை பற்றி அமித்ஷா
  • மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் பாதிப்பு!
  • ஜவ்வாது மலை பகுதியில் தீ விபத்து : 4 ஏக்கர் பரப்பளவிலான மூலிகை செடிகள் எரிந்து நாசம்

சந்தனகடத்தல் வீரப்பன் (VS) 18 வயது பிரியா!

October 11, 2018 நேயப்பிரியன்

“சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்து கொடுக்கும் எண்ணத்துடன் என் ஒரே மகளின் உதவியை போலீஸார் நாடியபோது அளவுக்கு வயது வெறும் 18. ஆரம்பத்தில் அவளு்க்கே தெரியாது அது என்ன உதவி என்பது. ஏன் எங்களுக்கே கொஞ்சம் நாட்களுக்கு தெரியாமால் இருந்தது போலீஸார் நகர்த்திய காய்” என கண் கலங்கினார் பிரியாவின் 68 வயதான தந்தை கே.எம். மூர்த்தி.வீரப்பனின் இருப்பிடம், திட்டங்கள் முக்கியமாக கண் பார்வை கோளாறு போன்ற ரகசியங்களை அதிரடிப் படையினர் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தவர் என் மகள் பிரியா.. அதன் அடிப்படையில்தான் மற்ற எல்லாமே அரங்கேறின. என்ன செய்தும் என்ன பிரயோஜனம் எல்லாமே வெஸ்ட் மிஞ்சியது வேறும் மன உலைச்சல் மட்டுமே என்று நொந்து கொண்டார்.

கண் கலங்கியபடி ஆரம்பித்தார் பிரியா,

“நான் அரசிடம் எந்த ஒரு தொகையையும் குறிப்பிட்டு கேட்கவில்லை சில பத்திரிகைகள் செய்தியை சென்சேஷனல் ஆக்க சில கோடி ரூபாய்களை கேட்டதாக தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். அரசு விருப்பப்பட்டு எதை கொடுத்தாலும் அது என் மகள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் மத்திய அரசு மற்றும் தமிழக டிஜிபி பரிந்துரைத்த பின்பும் இது அரசு கொள்கை சார்ந்த முடிவு என காலம் தாழ்த்துவது மனவேதனையளிக்கிறது.கிருஷ்ணமூர்த்தி அங்கில் 50 ஆண்டுகளாக எங்கள் குடும்ப நண்பர்,அவர் மூலமாக தான் அதிரடிப்படை எஸ்பி செந்தாமரைக் கண்ணன் என் குடும்பத்திற்கு அறிமுகமானார். கிருஷ்ணமூர்த்தி அங்கில் ஆவீனில் இன்ஸ்பெக்டராக இருந்து விஜிலன்சிற்கு பணி இடமாறுதலாகி இன்ஸ்பெக்டராக பணி ஒய்வுபெற்றவர். அவர் ஆவீனில் பணியாற்றியபோது அங்கே உயர் அதிகாரியாக பணியாற்றியாவர்தான் செந்தாமரைக் கண்ணன்.
ஒருமுறை பவானி கோயிலிக்கு செல்லும் போது கிருஷ்ணமூர்த்தி அங்கில் எங்களை அதிரடிப்படை முகாமுக்கு அழைத்துச் சென்றார் அன்றைய தினம் செந்தாமரைக் கண்ணன் அதிரடிப்படை எஸ்பியாக பதிவியேற்ற தினம்.

ஒரு சில மாதம் கழித்து எங்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார். அந்த சமயத்தில் ஒரு உதவியை வேண்டினார். வீரப்பனின் மனைவியை சிறிது காலம் கோவை வடவள்ளியில் உள்ள எங்கள் வீட்டின் மேல் போஷனில் தங்க வைக்கமாறு கேட்டுகொண்டார். அப்போது நான் கல்லூரியில் சேர்ந்த காலம்.ஒரு காவல் துறை உயர் அதிகாரி என்னிடம் உதவி கேட்டது பெருமையாக இருந்தது மறுப்புச் சொல்லவும் இயலாத சூழ்நிலை. என் பெற்றோரை சம்மதிக்க வைத்தேன். அவர்களுக்கு முத்துலஷ்மி வீரப்பனின் மனைவி என்பது தெரியாது.நாட்கள் செல்ல செல்ல காவல்துறை எங்களைக் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எங்கள் அனுமதியின்றி எங்கள் வீட்டில் 18 ஆண்டுகளுக்கு மேலாக வேலைச் செய்த ஓட்டுநர், சமயல்காரர் போன்றவர்களை வேலையை விட்டு அகற்றிவிட்டு அந்த இடத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஓட்டுநர், சமயலைகாரர்களை பணியமர்த்தினர்.இது பெற்றோருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில்தான் என் பெற்றோருக்கு உண்மை தெரியவந்தது. எதற்கு நமக்கு வேண்டாத வம்பு என்று என்னைத் திட்டித்தீர்த்தனர்.

எஸ்பி செந்தாமரைக் கண்ணன் கேட்டுக் கொண்டதற்கினங்க முத்துலஷ்மியுடன் நெருங்கி பழகி பல பயணுள்ள தகவல்களை கொடுத்தேன். அதன் அடிப்படையில்தான் வீரப்பன் சுடப்பட்டார் என்பதை இதுவரை எந்த காவல்துறை உயர் அதிகாரி ஏன் டிஜிபி உள்பட மறுப்பதற்கில்லை.
இதற்காக நான் கொடுத்த விலை மிக அதிகம் அதனால் ஏற்பட்ட பின்விலைவுகள் என் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. தொடர்ச்சியாக பல துன்பங்களை இன்று வரை அனுபவித்தும் வருகிறேன்.பிராஜக்ட் வீரப்பனில் பணியாற்றவர்களுக்கு வேகுமதி, ஊக்கத் தொகை, நிலம் என எல்லாம் வழங்கப்பட்டது. தனிநபராக அரசிற்கு (காவல்துறைக்கு) உதவிய என்னை நிர்கதியாக்கிவிட்டனர்.

இதே பணியை அண்டை மாநிலங்களில் செய்திருந்தால் அவர்கள் கொடுக்கும் மறியாதை வேறாக இருந்திருக்கும்.ஒரு வேலை புரட்சித் தலைவலி அம்மா உயிருடன் இருந்திருந்தால் என் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.இதற்கிடையே திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா “கில்லிங் ஆஃப் வீரப்பன்” என்ற திரைப்படத்திற்கு கதைக்கு தேவையான ரகசியங்களைப் பெற்றுக் கொண்டு வேறும் 1 லட்சம் ரூபாயைக் கொடுத்தார் அவர் கொடுத்த காசோலைக்கு பிடித்தம் போக என் கைக்கு வந்தது வேறும் 80 ஆயிரம் மட்டுமே, ஆனால் ஆரம்பத்தில் அவர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தத் தொகை 6 லட்சம்.இது தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனுமில்லை என்பதால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.

பிரியாவின் ஊக்கத் தொகை தொடர்பாக என்.கே.செந்தாமரை கண்ணன் ஐபிஎஸ்ஸிடம் பேசியபோது,

2004 ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 4 மாதக் காலம் பிரியாவின் வீட்டில் வாடகைக்குத் வீர்ப்பன் மனைவி முத்துலட்சுமியை தங்கவைத்து அவருடன் பிரியா நெருங்கி பழகி முக்கிய தகவல்களை சேகரித்துக் கொடத்தது மறுப்பதற்கு இல்லை.அப்போது வீரப்பனைப் பிடிக்க வியூகம் அமைத்த அதிரடிப்படை, வீரப்பனின் கண் பார்வை கோளாருக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள கோத்தகிரியில் உள்ள தனியார் விடுதிக்கு வருமாறு முத்துலட்சுமி மூலமாக அதிரடிப்படை வழிகாட்டுதலின் பேரில் பிரியா தகவல் அனுப்பினார். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இறுதிக்கட்டத்தில் வீரப்பன் அங்கு வரவில்லை. அதற்கு பிறகு முத்துலட்சுமி வீட்டை காலி செய்துவிட்டு தருமபுரி சென்றுவிட்டார்.அந்த பிராஜக்ட் அத்துடன் முடிந்தது.பிரியாவுக்கு அரசு ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள் வழங்கினால் எங்களக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை என்றார்.

எது எப்படியோ யூனிஃபார் அணியாமல் ஒரு சாமானியப் குடும்பப் பெண் உயிருக்கு ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவது பாராட்டுக்கும் பொற்றதலுக்கும் உரியது. இன்றுவரை சமூக வலைதளங்களின் முத்துலட்சுமி மற்றும் அவரின் உறவிணர்களின் வசைகளை தாங்கிக் கொண்டு வாழ்கையை நகர்த்தும் பிரியாவை அரசு பாராட்டி உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது சமூக அவளர்களின் கருத்து.

மேலும் படிக்க