• Download mobile app
12 Dec 2024, ThursdayEdition - 3228
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சத்குருவின் விருப்பப் பாடலை பாடிய ஜெர்மன் பாடகி!

March 2, 2024 தண்டோரா குழு

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார்.  

சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன்.பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர் இந்திய கர்நாடக பாடல்களை பாடி காணொளி வெளியிடுவதில் மிகவும் பிரபலமானவர். நம் பாரத நாட்டிற்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இவர் கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்து சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.  

அப்போது, ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்ட ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய சமஸ்கிருத பாடல் “நிர்வாண ஷடகத்தை” சத்குருவிற்கு பாடி அர்ப்பணித்தார். அவருடைய பக்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக சத்குரு அவர்கள் தனது மலர் மாலையை அணிவித்து ஆசி வழங்கினார்.

இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு “நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோக மையத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  உங்களுக்கு என் வாழ்த்துகளும் & ஆசியும்”என பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு, “வாவ்! நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை. உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்” என பதில் பதிவு இட்டுள்ளார் காசண்ட்ரா.  

அதுமட்டுமின்றி, ஈஷா யோக மையத்தில் அவர் தங்கியிருந்தபோது, சில யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். மேலும், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் குறித்தும் அறிந்து கொண்டார். அதோடு, சுற்றுச்சுழல் சார்ந்தும்,சமூக செயல்பாடுகள் சார்ந்தும் ஈஷா அறக்கட்டளை செய்து வரும் பங்களிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து, “நான் ஜெர்மனி திரும்பி செல்கையில்,இந்தியாவின் அனைத்து நினைவு தடங்களையும் என்னுள் வைத்துக் கொள்வேன். அதை கொண்டு நிறைய பாடல்களை உருவாக்குவேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க