• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிக்கு கடிதம்

January 12, 2022 தண்டோரா குழு

வழக்கு விசாரணைக்காக காணொலிக்காட்சி மூலம் ஆஜராவதால் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக வழக்கறிஞர்கள் சிரமத்துக்குள்ளாவதாக கோவை வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து கோர்ட்டுகளில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்தபட்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 10 ஆம் தேதி கோவை பார் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானங்கள் அடங்கிய நகலை மதுரை உயர் நீதிமன்ற கிளை தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை வழக்கு விசாரணைக்கு நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமும் அனுமதிக்கப்பட வேண்டும், சிறப்பு வழக்குகள் என பட்டியலிடப்பட்டது தொடர்பான விவரங்களை சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், வழக்கறிஞர்கள் தங்களின் வசதிகளுடன் நீதிமன்றங்களில் ஆஜராவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும், பிணை வழக்குகள் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தவும், இரு வழக்கறிஞர்களின் ஒத்த முடிவுகளுடன் அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க