• Download mobile app
19 Jan 2020, SundayEdition - 1439
FLASH NEWS
  • எஸ்.ஐ. வில்சன் மரணம் திட்டமிட்ட படுகொலை – கேரள போலீசார் தகவல்
  • கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை வேறு நீதிபதிக்கு மாற்ற நீதிபதி பரிந்துரை
  • பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கான தேதி நீட்டிப்பு..

கோவை ராஜவீதியில் 7 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

January 9, 2020 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் 7 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை சார்பில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை ராஜவீதி பகுதியில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 7 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டு குடோனில் மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் குடோன் உரிமையாளர்கள் நாகாராம், பேராராம், ரமேஷ், ஹரீஸ் தேவசீ ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க