• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ராஜவீதியில் 7 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

January 9, 2020 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் 7 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை சார்பில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை ராஜவீதி பகுதியில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 7 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டு குடோனில் மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் குடோன் உரிமையாளர்கள் நாகாராம், பேராராம், ரமேஷ், ஹரீஸ் தேவசீ ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க