• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்

February 24, 2020

பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்க புகார் பெட்டியை இன்று ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

தமிழக முதல்வர் பிப்ரவரி 24 தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கபட வேண்டும் என அறிவித்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக பெண்கள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்கபட்டது எனவும் இதன் நோக்கம் அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் எனவும் அவர்களது உரிமைகள் முழுமையாக கிடைக்க பெற வேண்டும் எனவும் அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்தால் அது களைய பட வேண்டும் என்ற நோக்கில் இந்த தினம் அனுசரிக்கபடுகிறது என தெரிவித்தார்.

காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் அவ்வப்போது வரப் பெறுகிறது எனவும் குழந்தைகள் பாதுகாப்பு துறை மூலமாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக தெரிவித்தார்.பாலியல் ரீதியான தொல்லைகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது எனவும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து இதனை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது என்றார்.பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாகவும் விசாக கமிட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வருவதாக கூறிய பணியில் ஈடுபட்டு உள்ள பெண்களுக்கு பாலியல் அத்துமீறல் அச்சுறுத்தல் ஏற்பட்டு அது தொடர்பாக தகவல் கிடைக்க பெறுகின்றன.அவர்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாலியல் புகார் தொடர்பாக தகவல் அளிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது எனவும் பழி வாங்கும் நோக்கில் பொய் புகார் அளிக்க கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது அதனையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகதாகவும் கூறிய அவர் கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக அவ்வப்போது தகவல் கிடைக்க பெறுகிறது. தற்போது அது குறைந்து உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் யார் புகார் அளித்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க