• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு மீறியதாக 24,500 பேர் மீது வழக்குப்பதிவு!

May 20, 2020

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு மீறியதாக 24,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை புறநகர் பகுதியில் பேரூர், பொள்ளாச்சி,வால்பாறை,கருமத்தம்பட்டி ஆகிய சப் டிவிஷன் காவல் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 15 வரை 17 ஆயிரத்து 912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 ஆயிரத்து 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவரிடமிருந்து 16 ஆயிரத்து 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 62 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு மீறியதாக 6 ஆயிரத்து 580 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1897 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆயிரத்து 644 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் முழுக்க மார்ச் 25 முதல் மே 17 வரை ஊரடங்கு மீறியதாக 24,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 23,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க