கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ்.இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார்.
பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.2016 ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தவர்.அவர் இதற்கு முன் திருவள்ளூர்,நாகர்கோவில், தாராபுரம், கடலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தமிழ்நாடு திறந்த மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குனராக தற்போது பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
பவன்குமாரின் நியமனம் கோவையில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு