• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகரின் குடியிருப்பு & அலுவலக வளாக தேவைகளுக்கு பல்வேறு தரமான திட்டங்களை அறிமுகம் செய்த டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்

June 15, 2024

கே.ஜி. குழுமத்தை சேர்ந்த டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் கோவையின் பல்வேறு முக்கிய இடங்களில் கட்டி வரும் ப்ரீமியம் அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றியும், அதன் வணிக வளாக கட்டிடங்கள் பற்றியும், வரவுள்ள அடுத்த குடியிருப்பு திட்டங்கள் பற்றியும் தெரிவிக்க, அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், சீனியர் துணை தலைவர் சுரேஷ் குமார் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலாவதாக சஞ்சனா விஜயகுமார் கூறுகையில்:-

கோவையில் ஒரு பக்கம் உள்கட்டமைப்பு சார்ந்த பல திட்டங்கள் வேகமாக நடைபெற்று வருகிறது, மற்றொரு பக்கம், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த முன்னேற்றங்கள் நடைபெற்று வருகிறது.

மிக பிரபலமான, மதிப்புமிக்க ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் ஏற்கனவே அலுவலகங்கள் அமைத்து வருகின்றன. இங்கிருந்து வெளியூர்களில் ஐ.டி. துறை வேலைக்கு சென்ற பணியாளர்களும் தற்போது மீண்டும் கோவைக்கே திரும்பி வருகின்றனர்.

இந்த முன்னேற்றங்களுக்கு இங்கு தேவைப்படும் குடியிருப்புகள் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைத்திட டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

அண்மையில் நாங்கள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் ‘ சிக்நேச்சர் சிட்டி’, கணபதி அருகே ‘எலீட் சிட்டி’, டைடல் பார்க் அருகே ‘ஐகான் சிட்டி’ , சிங்காநல்லூர்-ஹோப்ஸ் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சாலையில் ‘மெகா சிட்டி’ எனும் 4 அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அறிமுகம் செய்தோம். அனைத்திற்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மெகா சிட்டி, ஐகான் சிட்டி, எலீட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் கீழ் 1 மற்றும் 2 பெட் ரூம், ஹால், கிட்சன் (BHK) குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. சிக்நேச்சர் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்டூடியோ அப்பார்ட்மெண்ட், 1, 2 மற்றும் 3 பெட் ரூம், ஹால், கிட்சன் (BHK) குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் குடியிருப்போருக்கு தேவையான தரமான வசதிகள் இடம்பெறும். இவற்றின் விற்பனை மிக அருமையாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் ஒரு அசத்தலான வில்லா திட்டமும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதற்கு அடுத்ததாக கொடிசியா அருகேயும், பீளமேடு அருகேயும் 1, 2 மற்றும் 3 பெட் ரூம், ஹால், கிட்சன் (BHK) குடியிருப்புகள் கொண்ட ‘டெல்டா சிட்டி’ மற்றும் ‘யுனைடெட் சிட்டி’ ஆகிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் விரைவில் துவங்க உள்ளன.

குடியிருப்புகள் திட்டத்திற்கு அடுத்ததாக முதல் முறையாக அலுவலக வளாகங்கள் பிரிவிலும் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் தற்போது கால் பதித்து உள்ளது. கோவையில் 40,000 சதுர அடியில் TNCD ஸ்கொயர் மற்றும் 70,000 சதுர அடியில் TNCD ஹப் எனும் இரண்டு அலுவலக வளாகங்கள் திட்டம் நடைபெற்றுவருகிறது. TNCD ஸ்கொயர் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெரும், TNCD ஹப் ஏப்ரல் 2025ல் நிறைவு பெரும். மேலும் பிரம்மாண்ட TNCD டெக் பார்க் வளாக திட்டமும் விரைவில் துவங்க உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சுரேஷ் குமார்:-

சிக்நேச்சர் சிட்டி, ஐகான் சிட்டி மற்றும் எலீட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் ரூ.29.99 லட்சங்களில் இருந்து துவங்கும். இந்த திட்டங்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கு ஏற்ப இந்த விலையில் சற்று மாற்றங்கள் இருக்கும்.

மெகா சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு திட்டதில் 1 பெட் ரூம், ஹால், கிட்சன் (BHK) வீட்டின் விலை ரூ.40 லட்சம், 2 பெட் ரூம், ஹால், கிட்சன் (BHK) வீட்டின் விலை ரூ.65 லட்சம் ஆகும். இந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகளிலும் 70-80% வீடுகள் முன்பதிவாகிவிட்டன.

8க்கும் அதிகமான தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.1 பெட் ரூம், ஹால், கிட்சன் குடியிருப்புகளுக்கு 90% வரை வங்கி கடனுதவியும், 2 பெட் ரூம், ஹால், கிட்சன் குடியிருப்புகளுக்கு 80% கடன் உதவியும் கிடைக்கும். வட்டி விகிதம் 8.35 முதல் ஆரம்பிக்கின்றது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க