• Download mobile app
14 Aug 2022, SundayEdition - 2377
FLASH NEWS
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

June 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. துனை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி அணையில் இருந்து நீரினை பெற்று தந்த தமிழக முதல்வருக்கும், கேரளா முதல்வருக்கும், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சருக்கும், மின்சாரத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம். குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி, கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 180 பணியிடங்கள் தோற்றுவிக்க நகராட்சி நிர்வாக இயக்குநர் வழியாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க அனுமதி உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசியாவது:

குறிச்சி பகுதியில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க 5 ஆழ்துளை கிணறுகள் அமைத்து தர வேண்டும். குறிச்சி பகுதியில் குடிநீர் விநியோகம் 22 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்கள் செயல்பாட்டில் இல்லை. ஹோப் காலேஜ் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் சாலையில் செல்கிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதனை சீரசெய்யாமல் உள்ளனர். மாநகராட்சி சார்பாக குடிநீர் வாரியத்திற்கு பணம் செலுத்தவில்லை என்கிறார்கள். அம்ரூத் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் அமைத்தலில் முறைகேடு நடந்துள்ளது என்றனர்.

மதிமுக சார்பில் 26 வது வார்டு சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில்,

சூயஸ் சார்பாக குடிநீர் கட்டணம் இரட்டிப்பாக வசூல் செய்யப்படுகிறது. எனவே மாநகராட்சி சார்பாக குடிநீர் கட்டணம் வசூலில் பழைய நடைமுறையே பின்பற்ற வேண்டும். மாமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணிக்காக வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சம் போதவே போதாது. குறைந்தது ரூ.25 லட்சத்தை ஒதுக்கி கொடுத்தால் தான் போதுமானதாக இருக்கும். 14 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. அதுவும் விட்டு விட்டு 18 மணி நேரங்களை கடந்து தான் பொதுமக்களுக்கு கிடைக்கிறது.

இதை எந்த அதிகாரியிடம் கேட்கிறது என்று தெரியவில்லை. யாரும் போன் எடுத்து பதில் சொல்வதில்லை. இதனால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. ஆகவே அதற்கென தனி அதிகாரி நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசியதாவது: வார்டு பகுதிகளில் தேவையான குடிநீர் தேவையை தவிர்த்து இதர தேவைகளுக்காக தண்ணீர் கிடைக்க தேவையான ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரப்படும். குடிநீர் விநியோக பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். மண்டல கூட்டங்களில் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு குடிநீர் விநியோகம் சீர் செய்ய முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை கமிஷனர் ஷர்மிளா பேசியதாவது:

35 மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்கள் உள்ளன. இதில் 5 மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்கள் செயல்பாட்டிள் உள்ளன. இதில் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில் அனைத்து மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்களும் செயல்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க