• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் போலீசார் சோதனை

August 23, 2019 தண்டோரா குழு

லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து கோவைக்கு நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து துவங்கிய பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இந்துக் கோயில்கள் தேவாலயங்கள் மசூதிகள் போன்ற இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இன்று மாலை கோவையில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான Brookfield mall 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாலில் இருக்கின்ற அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

கோவையில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் மற்றும் தமிழக கமாண்டோ படையினர் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோவையை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து பன்னாட்டு விமான நிலையம் ,விமான நிலையம் அருகில் உள்ள பன் மால்ஆகிய இடங்களில் சோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க