• Download mobile app
18 Oct 2021, MondayEdition - 2077
FLASH NEWS
  • வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய தளங்கள் இயங்குவதில் பாதிப்பு
  • பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
  • ரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்
  • பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா? – ராகுல் காந்தி
  • தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

கோவை பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவி தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி !

October 12, 2021 தண்டோரா குழு

சென்னையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில்,கோவை பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் 9 வயது மாணவி ஆரிகா பதக்கங்களை வென்று உள்ளார்.

தமிழ்நாடு ஸ்டேட் அக்வாட்டிக் சங்கம் சார்பில் 37 வது சப் – ஜூனியர் மற்றும் ஜூனியர் குரூப் , மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் நடந்தது.இந்த போட்டியில் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதில், கோவை பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் 9 வயது ஆன மாணவி ஆரிகா,வெள்ளி பதக்கத்தை 100 மீட்டர் ப்ரிஸ்டைலில் 1 நிமிடம் 32 நொடிகளில் நீந்தி வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.மேலும்,50 மீட்டர் ப்ரிஸ்டைலில் வெண்கல பதக்கமும் பெற்றார்.

கோவை பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நீச்சல் பயிற்றுனர்ஹரிதாஸ் B.A. , NIS . , ASCA Level 4 போன்ற தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து நீச்சல் பயிற்றுனர்
ஹரிதாஸ்,

கோவை பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி 25 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தற்போது மாணவி
ஆரிகா தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் படிக்க