 February 22, 2021
February 22, 2021  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  
டெல்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில், காலை கோவை புரூபாண்ட் சாலை அருகே உள்ள தண்டவாளத்தில் வந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிய ஆண் ஒருவர் ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயிலில் ஒருவர் அடிப்பட்டது அறிந்ததும் உடனடியாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். 
இதையடுத்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் ரயிலில் அடியே ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான அறிகுறியுடன் இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அடிப்பட்டு இறந்தவர் புற்றுநோயாலி என்பதற்கான ஆவணங்கள் இருந்ததால், அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் விரைவு ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.