• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை டைடில் பார்க்கில் ரூ.114 கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா

December 11, 2020 தண்டோரா குழு

கோவை ஹோப்காலேஜ் அருகே செயல்பட்டு வரும் டைடில் பார்க்கில் தகவல் தொழில்நுட்ப பூங்கா புதிய கட்டிடத்திற்கு காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கோவை ஹோப் காலேஜ் டைட்டில் பார்க் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மென்பொருள் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

டைடில் பார்க் வளாகத்தில் 2.42 ஏக்கர் பரப்பளவில், ரூ.114 கோடியே 16 லட்சத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் புதிதாக அமைய உள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, டைடில் பார்க் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க