• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் 35 வது பட்டமளிப்பு விழா

January 20, 2024 தண்டோரா குழு

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான  பட்டமளிப்பு விழாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (20.1.24 – 21.1.24) குமரகுரு நிறுவன வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் ஆடிட்டோரியத்தில் நடத்துகிறது.இதில்  மொத்தம் 2040 பட்டதாரிகள் பட்டம் பெறுகின்றனர். 

முதல் நாளில் நாஸ்காம் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் நம்பியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் எம்.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். குமரகுரு நிறுவனங்களின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின்  முதல்வர் டி.சரவணன் ஆண்டறிக்கையை வழங்கினார்.

பிரதம விருந்தினர் ராஜேஷ் நம்பியார் பேசுகையில்,

இந்த நேரத்தில் இந்தியர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது.இந்தியாவின் தனித்துவமான வளர்ச்சி சாத்தியம் பற்றி பேசிய தலைமை விருந்தினர், இந்த நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 7% ஆக இருக்கும் என்று கூறினார். இது உலகின் எந்த பெரிய பொருளாதாரத்திற்கும் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஆகும்.

இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு புதுமைகளால் மிகவும் வலுவாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து விரைவான கட்டணங்களில் 46% UPI வழியாக இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்தியாவையும் அதன் திறனையும் உலகம் அங்கீகரித்து வருகிறது. மிகவும் இளம், திறமையான பணியாளர்கள் மற்றும் துடிப்பான பொருளாதாரம் ஆகியவற்றின் கலவையானது நாட்டின் வளர்ச்சி திறனை அதிகரிக்கிறது.

“ஒரு நாடாக நாம் இன்று இருக்கும் இடத்தை விட சிறந்த இடத்தில் இருந்ததில்லை,” என்று அவர் கூறினார்.

ஆய்வாளர்களின் கணிப்புகளின் படி, 2030 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு பிறகு இந்தியா,  ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி 3 வது பெரிய பொருளாதாரமாக மாறும், மேலும் வலுவான வளர்ச்சி விகிதம் இருப்பதால் இது சாத்தியமாகக் கூடும்.

இந்த வளர்ச்சி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.
அதே நேரத்தில் தொழில்நுட்ப நிபுணத்துவம் மட்டும் போதாது என்றும் ;  சிறிதளவு படைப்பாற்றல் சிந்தனையுடன் தொழில்நுட்பத்தை இணைக்க தெரிந்தவர்களுக்கு எதிர்காலம் வசமாகும்.

எனவே பட்டதாரிகள் வாழ்நாள் முழுவதும் கற்றலை தொடர வேண்டும், உலகளாவிய மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்,அவர் உரையை தொடர்ந்து, தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க