• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவை கங்கா மருத்துவமனையின் மைக்ரோ சர்ஜரி லேப் உலகம் முழுவதும்1500 பேருக்கு நுண் அறுவை சிகிச்சை பயிற்சி

January 31, 2023 தண்டோரா குழு

கோவை கங்கா மருத்துவமனையில் உள்ளபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மைக்ரோ சர்ஜரி லேப், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 142 நகரங்கள் உட்பட 68 நாடுகளில் இருந்து 1500 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக், கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் எஸ். ராஜ சபாபதி கூறுகையில்,

மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது 1.0 மிமீ விட்டம் கொண்ட ரத்த நாளங்களை இணைப்பதை உள்ளடக்கியது என்று விளக்கினார்.இதில்1.0மிமீ அளவுள்ளசிறிய ரத்தநாளங்களில் 4 முதல் 5 தையல்கள் போட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த நுண்கலையை கற்பிக்க எங்கள் மருத்துவமனையில் கடந்த 2000–ம் ஆண்டு இந்த மைக்ரோ சர்ஜரி லேப்துவக்கப்பட்டது.இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு வார காலம், அறுவை சிகிச்சை அரங்கில் உருவகப்படுத்தப்பட்ட நிலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

கங்கா மருத்துவமனையில் உள்ள மைக்ரோ லேப் உலகின் மிகச் சிறந்த ஆய்வகங்களில்
ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.இந்தியாவின் 142 நகரங்கள்மற்றும் 68 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்றது கோவை நகருக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.இந்த ஆய்வகம் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல்வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற1500 பேரில், 164 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கிலாந்திலிருந்தும், 82 அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்தனர்.

இந்த மைக்ரோ சர்ஜரி ஆய்வகத்தில் தற்போது 4 நுண்ணோக்கிகள் உள்ளன ஒரே நேரத்திலும் 4 பேர் பயிற்சி பெறலாம்.இதில் முதல் 1000 பேருக்கான பயிற்சி என்ற நிலையை எட்டசுமார் 18 ஆண்டுகள் ஆனது, ஆனால்அடுத்த 500 பேர் 5 ஆண்டுகளில்பயிற்சிபெற்றுள்ளனர்.

இந்தபயிற்சியைபெற்ற 4 பேரில் 3 பேர் புது டெல்லியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச்சேர்ந்த 2 பேர், புதுடெல்லியில் உள்ள டாக்டர் ஆர்.எம்.எல்.மருத்துவமனையைச்
சேர்ந்த ஒருவர் மற்றும் போபாலில் இருந்து ஒருவர் என பயிற்சி பெற்றுள்ளனர். நுண் அறுவை சிகிச்சை பயிற்சிக்காக வரும் மருத்துவ நிபுணர்களுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் பயிற்சி பெறவும் 70 நாடுகளில் இருந்து மொத்தம் 2800 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இம்மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் எங்கள்மருத்துவமனை குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புகளையும்நடத்துகிறது. பல வளரும் நாடுகளில் மக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் காயங்களால் ஏற்படும் உடல் உறுப்புபாதிப்பை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம்சீரமைக்கும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்உலகம் முழுவதும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் எங்கள்மருத்துவமனையும்முக்கியபங்குவகிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் டாக்டர் ராஜ சபாபதி தெரிவித்தார்.

மேலும் படிக்க