• Download mobile app
20 Nov 2019, WednesdayEdition - 1379
FLASH NEWS
  • முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • “வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகதன்மையை மாநிலங்களவை பிரதிபலிக்கிறது!” – பிரதமர் மோடி
  • கொரியா தொடர் – சாய்னா நேவால் விலகல்
  • திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல: கி.வீரமணி

கோவை ஒண்டிப்புதூரில் 5வயது மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்த தாய்

October 18, 2019 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூரை வேதவள்ளி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி. இவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் கடந்த ஆறு மாதங்களாக அங்கு வசித்து வந்துள்ளார். வேதவள்ளியின் கணவர் கண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த போது இறந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருடன் இவர்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அக்கம் பக்கத்தினருக்கு விவரம் ஏதும் தெரியவில்லை. வேதவள்ளியின் உடலை கைப்பற்றிய சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேதவள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

மேலும் படிக்க