இரத்தினம் கல்விக் குழுமங்கள், நவீன காலத்திற்கு ஏற்றவாறும்,நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறும் மாணவர்களை தயார் செய்யும் திறன்மிக்க கல்விக் குழுமமாக செயல்பட்டு வருகிறது.
இன்றைய மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியை வழங்குவதோடு நின்றுவிடாமல்,இன்றைய நவீன காலகட்டத்திற்கு தேவையான துறை சார்ந்த அறிவையும்,திறன்களையும் திறம்பட அளித்து அவர்களை வழியில் வெற்றிபெற வைக்கிறது.அந்த வகையில் ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி அளித்திட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நெக்ஸ்ட் ஜென் கேரியர் என்ற ஒரு பெயரில் புதிய ஆய்வக அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஆய்வகம் பன்னாட்டு நிறுவனமான சிகிச்சின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் கியர் திறந்து வைத்தார்.இந்த ஆய்வகத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.நவீன தொழில்நுட்ப துறைகளில் செயற்கை நுண்ணறிவு,பிளாக் செயின், தரவு அறிவியல் போன்றவற்றில் பயிற்சியளித்து அவர்களின் கற்றல் திறமையை மேம்பட செய்வதாகும். உலகின் தலைசிறந்த நிறுவங்களான ஐபிஎம், மைக்ரோசாப்ட் மற்றும் கோர்ஸ் இரா போன்றவற்றின் சான்றிதழ் படிப்புகளை ஆசிரியர்களுக்கு இந்த ஆய்வகம் மூலம் வழங்கி ஆசிரியர்களின் தரத்தை உலக அளவில் தலைசிறந்த தொழிநுட்ப வல்லுனர்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
குறிப்பாக நிறுவனத்தின் தரவு அறிவியலின் வல்லுநர் சான்றிதழும் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அஸுர் ஏஐ ஃபண்ட்மெண்டல்ஸ் சான்றிதழும் பயிற்றுவிக்கப்படுகின்றது.நிகழ்வில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயல் அதிகாரி முனைவர்.R.மாணிக்கம் , இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைமை வணிக அதிகாரி முனைவர்.பா.நாகராஜ் முன்னிலை வகித்தார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு