• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல்

January 14, 2020

கோவையில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கள் வைத்து, ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை துவைக்கிவைத்தார்.

தை 1ந் தேதி தமிழர்களின் முதன்மை விழாவான பொங்கல் விழாவை உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் அன்று விடுமுறை தினம் என்பதால் பள்ளிகளில் முன்னதாகவே பொங்கல் விழாவை கொண்டாடுவது வழக்கமாகும்.

அந்த வகையில் கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமத்துவம் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து பொங்கலை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் சமூக வேறுபாடுகளை கலைந்து மாணவர்கள் அனைவரும் தமிழர் திருநாளை பாரம்பரியம் மாறாமல் மகிச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவை பள்ளியின் நிர்வாகி கௌரி மற்றும் கௌரி உதயேந்திரன் ஆகியோர் முன்னின்று நடத்தினார். இவர்களுடன் பள்ளியின் நிர்வாகி விப்ரஜா, தலைமை ஆசிரியை சரன்யா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க