February 15, 2025
தண்டோரா குழு
ராஜகோபால் ஜி, டாக்டர். ஏ.எஸ். அரவிந்த் மற்றும் டாக்டர் ரீமா நாடிக் ஆகியோரால் நிறுவப்பட்ட லைஃப் பிரிட்ஜ் சீனியர் கேர் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு பிரிவான KITES சீனியர் கேர், கோயம்புத்தூரில் உள்ள சரவணம்பட்டியில் அதன் புதிய முதியோர் பராமரிப்பு மையத்தை இன்று தொடங்கியது.
இதனை விஜய் டி.வி.புகழ் கோபிநாத் திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் கைட்ஸ் சீனியர் கேர் மையத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால்,டாக்டர்.ரீமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதியவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ பராமரிப்பு சேவைகளையும் வழங்குகிறது கைட்ஸ் சீனியர் கேர் மையம். மேலும் தங்களது வீடுகளிலேயே மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவோருக்கும் திறமையான செவிலியர்களைக் கொண்டு சிறப்பான சேவையினை வழங்குகிறது கைட்ஸ் சீனியர் கேர் மையம்.
மேலும் முதியவர்களின் ஆரோக்கியத்தை சீராக நிர்வகிப்பதோடு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது இந்த மருத்துவ மையம். வலி மேலாண்மை, நோய்தடுப்பு சிகிச்சை மற்றும் நல்வாழ்வு , மனநல மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கணிவான பராமரிப்பு சேவைகள் குறைந்த கட்டணத்தில் இங்கு அளிக்கப்படுகிறது.
மேலும் நீண்ட நாட்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவோர் சிறப்பு கட்டணத்தில் சேவைகளை பெறலாம்.
“Lifbridge Senior Care Private Limited குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரீமா நதிக் கூறுகையில்,
“இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, மற்றும் கவனிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட எங்கள் புதிய மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.” மூதியோரின் வாழ்க்கை தரம் கோயம்புத்தூரில் ஒரு முக்கிய மையமாக உருவெடுக்கும். இந்த வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் நமது எண்ணிக்கை வலுப்படுத்தும் அதே வேளையில், சிறப்பு கவனிப்பில் உள்ள முக்கிய இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. நமது இலக்கு மக்கள் தொகையை எட்டாத நிலையில், நகரத்தின் சுகாதாரச் சூழலைக் காட்டிலும் இந்த மையத்தை முக்கியமான ஒன்றாக நாம் பார்க்கிறோம்.
இந்த விரிவாக்கமானது, அடுத்த 18 மாதங்களில் மேலும் 10 மையங்களை திறப்பது உட்பட, KITES மூத்த பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.