 September 22, 2020
September 22, 2020  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                கோவையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது கட்டிடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(25). கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்த பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தினேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினேஷ்  மீண்டும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.