• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவையில் 3 புதிய காவல் நிலையங்கள் – 26ல் டிஜிபி திறந்து வைக்கிறார்

May 23, 2023 தண்டோரா குழு

கோவையில் 3 புதிய காவல் நிலையங்களை 26ம் தேதி டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைக்க உள்ளார்.கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

இதுதவிர,3 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.இந்நிலையில், கோவை மாநகரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்கவும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக்கி ரோந்து பணியை மேற்கொள்ள 3 காவல் நிலையங்கள் அமைக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் என 3 புதிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டது.அதன்படி, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், கரும்பு கடை காவல் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 11 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட போலீசார் என ஒரு காவல் நிலையத்திற்கு 25 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கரும்புக்கடை காவல் நிலையம் ஆயிஷா மஹால் அருகேயும், கவுண்டம்பாளையம் காவல் நிலையம் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்திலும், சுந்தராபுரம் காவல் நிலையம் தனியார் கட்டிடத்தில் என மூன்று காவல் நிலையங்களும் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த புதிய 3 காவல் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன. இதை வருகிற 26ம் தேதி தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க