January 30, 2025
தண்டோரா குழு
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் என்பவர் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சுமார் 240 கிராம் எடை கொண்ட சொக்கத்தங்கத்தை அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் அவரது மனைவி ரம்யா,மற்றும் தாயார் மீனா ஆகிய மூவரும் சேர்ந்து வரதராஜ் என்பவருக்கு தங்கத்தை இரண்டு நாட்களில் விற்று தருவதாக கூறி தங்கத்தை வாங்கிச் சென்றுள்ளனர் அதன் பின் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை தந்து விடுகிறேன், என்று ஏமாற்றி வருகிறார் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த முத்துமாணிக்கம் கோவை மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.