• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்ரீ பகவான் மகாவீர் கோசாலா சார்பில் அகிம்சையை வலியுறுத்தி கோசாலா குறும்படம் வெளியீடு

October 3, 2019

ஸ்ரீ பகவான் மகாவீர் கோசோலை சார்பில் அஹிம்சையை வலியுறுத்தி குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீ பகவான் மகாவீர் கோசோலை சார்பில் மாடுகளை கொல்லக்கூடாது அஹிம்சை வழியில் நடக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது. குறும்பட வெளியீட்டு விழாவில் கோசோலை தலைவர் கைலாஷ் ஜி குமார் ஜெயின், செயலாளர் சுனில் குமார் நகாட்டா ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவையொட்டி மும்பையை சேர்ந்த குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சுதிர் இயக்கிய கோசோலை மாடுகள் பற்றிய விழிப்புணர்வு படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் திருஷ்லா குமாரி கோசாலை மேலாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கோசாலை தலைவர் கைலாஷ் ஜி குமார் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது,

பொள்ளாச்சி அருகே மயிலேரிபாளையத்தில் 26 ஏக்கர் பரப்பில் இந்தக் கோசோலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு 28 மாடுகளைக் கொண்டு பராமரித்து வந்த கோசோலை தற்போது 1250 மாடுகள் உள்ளன இவைகளை பராமரிக்க ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் தேவைப்படுகிறது. அதை நன்கொடை மூலம் பெற்று இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறோம். இன்று அஹிம்சை வழியில் மாடுகளை சித்திரவதை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி குறும்படத்தை வெளியிட்டுள்ளோம். இது கோவை மக்களுக்கு விழிப்புணர்வு குறும்படமாக அமையும் என்றார் இந்த நிகழ்வில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்

மேலும் படிக்க