• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம்

March 19, 2023 தண்டோரா குழு

கோடை காலம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக,ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

கோடை காலத்தை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக நீர் மோர் வழங்கும் நடமாடும் தண்ணீர் பந்தல் எனும் அசத்தல் திட்டத்தை துவக்கியுள்ளனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற, இதற்கான துவக்க விழா காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

ஆட்டோவில் தாகம் தீர்ப்போம் எனும் சேவையாக துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஜே.ஆர்.டி. குழுமங்களின் தலைவர் ஜே.ஆர்.டி. ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நீர் மோர் கேனை வைத்து கொண்டு ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் முதல் அனைத்து மக்களுக்கும் நீர் மோரை இலவசமாக வழங்கி வரும் இத்திட்டத்தை கோவை வாழ் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இதற்கான துவக்க நிகழ்ச்சியில், சுதந்திர மீட்டர் ஆட்டோ நிர்வாகிகள் ராஜபழனி பாலாஜி பஞ்சலிங்கம் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் பொருளாளர் ராஜா துணை தலைவர் மாரிராஜ் இணை செயலாளர் சதீஷ் குமார் இணை செயலாளர் அருண்குமார் அமைப்பாளர் செந்தில்குமார் துணை அமைப்பாளர் சரவணன் ஆலோசகர் ரோஹித் மாவட்ட நிர்வாகி வினோத் குமார் சிங்கை நகர தலைவர் சுரேஷ் செயலாளர் சதீஷ் உறுப்பினர் கருப்புசாமி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க