• Download mobile app
18 Nov 2025, TuesdayEdition - 3569
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை

November 9, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ் சிங்(63) என்பவரின் ஹோம் ஃபார் சில்ரன் என்ற தங்கும் விடுதியில் தங்கி படித்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சார்லஸ் சிங் (63) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று சார்லஸ் சிங்கிற்கு 22 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் கனிமொழி (WPC 1127) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் பாராட்டினார்.

மேலும் படிக்க