• Download mobile app
15 Jan 2021, FridayEdition - 1801
FLASH NEWS
  • ஜன.8 முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – சுகாதாரத்துறை செயலர்
  • “பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட தப்பித்துவிடக் கூடாது!” – மு.க.ஸ்டாலின்
  • பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்கும் பரவக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
  • | திமுகவைத் தொடர்ந்து புதிதாக சுற்றுச் சூழல் அணியை உருவாக்கியது மக்கள் நீதி மய்யம்!
  • “சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கும் இருக்கும்” – மு.க. அழகிரி
  • தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

கோவையில் போகி பண்டிகையை ஒட்டி பெரியாரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சி

January 13, 2021 தண்டோரா குழு

கோவையில் போகி பண்டிகையை ஒட்டி இந்து மக்கள் கட்சியினர் பெரியாரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகையையொட்டி இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் புத்தகங்கள் இருப்பதாக கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சித்தனர்.

அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சிவத்திரு பிரசன்ன ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியாரின் கடவுள் மறுப்பு,பெண் ஏன் அடிமையானாள் உள்ளிட்ட அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்திவதில் அக்கட்சியினர் முனைப்பு காட்டினர். அப்போது போலீசார் இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் பிரசன்ன ஸ்வாமியை கைது செய்து அழைத்து சென்றனர்.இச்சம்பவத்தால் அசோக் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க