- உச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை
- “விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு” – நாசா
கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண் நேற்று கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகில் இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் பின்தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதை கண்டு பயந்த அப்பெண் வேகமாக செல்ல முயலும் போது, அவரை முந்திச் சென்று காவலர் வழிமறித்துள்ளார். பின் எங்கே செல்கிறீர்கள் என விசாரித்த அவர் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் கண் அழகாக இருக்கிறது என்றும் மேலும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது.
தான் கீரணத்தம் செல்வதாகவும் அங்கு உறவினர்களை பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் காவலரிடம் கூறி விட்டு வேகமாக தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.ஆனால் காவலரும் விடாமல் பின் தொடர்ந்துள்ளார். இதனால் பீதியடைந்த அப்பெண், அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சென்று அமர்ந்து கொண்டு தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அங்கும் சென்ற காவலர் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகின்றது.இதனிடையே பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பெண்ணின் கணவர் அத்திப்பாளையம் பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து காவலரை சுற்றிவளைத்தனர். பொது மக்கள் ஓன்று கூடியதை பார்த்த காவலர் அருகில் இருந்த கடைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் பொது மக்கள் காவலரை பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை மேற்கொண்ட போது காவலரின் பெயர் பிரபாகர் என்பதும், அவர் குடிபோதையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பியின் ஜீப் டிரைவராக தற்போது காவலர் பிரபாகர் பணியில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.பிரபாகரனின் இரு சக்கர வாகனத்தில் இருந்து மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சரண்யா,தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் மற்றும் சீண்டல் குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து உடனடியாக கோவில்பாளையம் காவல் துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் உடனடியாக காவலர் பிரபாகரனை பணியிடைநீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்திரவிட்டார். மேலும் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் காவலர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் பார்வைக்காக கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில் புதிதாக போர் பயிற்சி விமானம்
குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக தமிழகத்தில் முதல் கைது
கோவை கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் தொழில்நுட்ப உதவிகள் தேவை – இரும்பு வியாபாரிகள் கோரிக்கை
கோவையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு
சுவர் இடிந்து விழுந்த விவகாரம் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு