- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
- மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது – ப.சிதம்பரம்
- முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை – கே.பி.முனுசாமி
கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வி (50) திருகுமரன் நகர் பகுதியில் தனது இருமகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 10 மணியளவில் வேலைக்கு புறப்படுவதற்காக வீட்டுக்குள்ளே இருந்து வெளியே வருவதற்கு கதவை திறந்துள்ளார்.
அப்போது கதவுக்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத நபர் நின்று கொண்டிருப்பதை பார்த்த செல்வி எதற்கு நிற்கிறாய் என்று கேட்டபோது அந்த நபர் வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்க்கச் சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த செல்வி கதவை மூட சென்ற போது அந்த நபர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து செல்வி கீழே தள்ளிவிட்டு தப்பித்து ஓடினார்.
இதனையடுத்து பதறிக்கொண்டு வீட்டை வெளியே வந்த செல்வி பார்க்கும்போது தன்னிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த நபர் வெளியே காத்திருந்த மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது.இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.புகாரின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததும் ஒருவர் வெளியே காத்திருந்து நோட்டமிடுவதும் மற்றொரு நபர் வீட்டிற்குள் புகுந்து செல்வியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தயார் நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்ற போது வாகனத்தில் தயாராக இருந்த நபர் வாகனத்தை வேகமாக இயக்க தங்க சங்கிலியை பறித்தவர் விழுந்தடித்து மீண்டும் வாகனத்தில் ஏறி தப்பி செல்வதும் தெரியவந்தது.
வீட்டில் செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி இருவரும் இந்த சங்கிலி பறிப்பை அரங்கேற்றியுள்ளனர். மேலும் இச்சமபவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு சங்கிலி பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இன்னிலையில் பட்டபகலில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்மணியிடம் சங்கிலி பறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி ஜெயந்தி: தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல்!
கோவையில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை திறப்பு !
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ட்ஸ் கோவை மையம் சார்பில் உலக கட்டிடக்கலை தின கண்காட்சி
சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை !
கோவையில் அக்.2ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை !
பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சியின் நிறுவன தின விழா