• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவையில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல்

March 16, 2023 தண்டோரா குழு

கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில் 2 குழுவினர் துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் நேற்று மாலை 5 மணி அளவில் சோதனை நடத்தினர்.இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டது. மேலும் உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.அதேபோல் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.அலுவலகத்தில் இருந்தவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் உள்ள ஒவ்வாரு அறைகள், மேஜைகள், குப்பை தொட்டி, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். அப்போது வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு குழுவினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.13,500 லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை வடக்கு வட்டார அலுவலகம் மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.73,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க