• Download mobile app
02 Jul 2020, ThursdayEdition - 1604
FLASH NEWS
  • கொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி
  • கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு!
  • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..!
  • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..!
  • சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு !
  • கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை!
  • நாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி!
  • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • ஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
  • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
  • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
  • ஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை?
  • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
  • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
  • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
  • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கோவையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபர்ட் ஐ-டச் ஸ்டார்ட் வாகனம் அறிமுகம்

October 14, 2019 தண்டோரா குழு

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, கோவையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபர்ட் ஐ-டச் ஸ்டார்ட் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான முகப்பு விளக்கு அமைப்பு, குஷன் பேக் ரெஸ்ட் உடன் கூடிய நீண்ட, சௌகரியமான இரட்டை வண்ண இருக்கை, குரோமிலான லெக் கார்டு மற்றும் குரோமிலான சைலென்சர் கார்டு ஆகிய குரோம் அம்சங்கள் மற்றும் பயணிக்கும்போது மேம்பட்ட சௌகரியத்தை உறுதி செய்யும் முன்புற ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் உட்பட, மேம்படுத்தப்பட்ட பல ஸ்டைலிங் அம்சங்கள் பொருந்தியதாக இந்த வாகனம் வெளிவந்திருக்கிறது.

இது குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் பயன்பாட்டு தயாரிப்புகள் துறையின்; துணைத் தலைவர் எஸ்.வைத்தியநாதன் கூறுகையில்,

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபர்ட ஐ-டச் ஸ்டார் வேரியண்ட்டில் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் சிஸ்டம் கொண்ட ஐ-டச் ஸ்டார்ட் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.எந்த இடத்திற்குச் சென்றாலும் தொடர்பில் இருப்பதை ஏதுவாக்க மொபைல் சார்ஜிங் வசதி, மோட்டார்சைக்கிள் போன்ற முன்புற ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், எந்த சாலை நிலைகளுக்கும் பொருத்தமான 16 அங்குல பெரிய சக்கரங்கள், எளிதாக பயன்படுத்தக்கூடிய சென்டர் ஸ்டேண்டு, சிறப்பான பிரேக்கிங்கிற்கு சிங்க் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் போன்ற இந்த வேரியண்ட்டின் பல்வேறு அம்சங்கள், இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனையும், அழகியல் அம்சங்களையும் இன்னும் உயர்த்திக் காட்டுகின்றன.இதுமட்டுமின்றி ட்டோமேட்டிக் கியர் உடன் கூடிய கச்சிதமான, இலகுவான எடை வடிவமைப்பு கொண்டது. சந்தையில் கிடைக்கக்கூடிய, மிக சிக்கனமான விலைநிர்ணயம் கொண்ட இருசக்கர வாகனங்களுள் ஒன்றாக இந்த அம்சங்கள் இதனை நிலைநிறுத்தியுள்ளன என்றார்.

இவ்வாகனம், கூல் மின்ட் ப்ளு, லஸ்டர் கோல்டு மற்றும் ஸ்பார்க்கிளிங் சில்வர் என்ற மூன்று தனித்துவமான வண்ணங்களில் வெளிவருகிறது.தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படும் இவ்வாகனமானது,அதைத்தொடர்ந்து பிற சந்தைகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். புதிதாக அறிமுகம் செய்யப்படுகின்ற டிவிஎஸ் எக்ஸ்எல்100 கம்ஃபர்ட் ஐ-டச் ஸ்டார்ட் – ன் விலையானது, ரூ.41,619ஃ- (எக்ஸ்-ஷோரூம், தமிழ்நாடு) என்பதில் ஆரம்பமாகிறது. தற்போது டிவிஎஸ் எக்ஸ்எல் 100 பிராண்டு பெயரின் கீழ், எக்ஸ்எல் 100, எக்ஸ்எல் 100 கம்ஃபர்ட், எக்ஸ்எல் 100 ஹெவிடியூட்டி, எக்ஸ்எல் 100 ஹெவிடியூட்டி ஐ-டச் ஸ்டார்ட் மற்றும் புதிய எக்ஸ்எல் 100 கம்ஃபர்ட் ஐ-டச் ஸ்டார்ட் என ஐந்து வேரியண்ட்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க