• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்

April 11, 2025 தண்டோரா குழு

சூயஸ் இந்தியா, வாசன் ஐ கேர், நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் கோவை ராமகிருஷ்ணாபுரத்தில் நடந்தியது.

ஒருங்கிணைந்த இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெற்றனர். பொது மருத்துவம், கண் பரிசோதனை, இலவச ரத்த பரிசோதனை, எஸ்டிஐ பரிசோதனை, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் அவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சூயஸ் இந்தியா தேவையான உதவிகளை மேற்கொண்டு, அனைவருக்கும் மருத்துவம், இடைவெளியை நிரப்புவோம் என்ற கருத்தில் இது நடந்தது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்கும் நோக்கத்தோடு இந்த முகாம் நடந்தது. பல்வேறு காரணிகளால் கிடைக்காத தொடர்ச்சியான மருத்துவ வசதிகளை பெற இந்த முகாம் வழி வகுக்கும். பொது மருத்துவம், கண் பரிசோதனை, இலவச ரத்த பரிசோதனை, பாலியல் ரீதியான தொற்றுக்கள், தேவையான பரிசோதனைகள் இவற்றுடன் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. தேவைபடுவோர்க்கு தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பல்வேறு பயனுள்ள கருத்துக்களை வழங்கியதோடு, எய்ட்ஸ் கட்டுப்பாடு, பாதுகாப்பான பயிற்சிகள், தேவையான சேவை உதவிகள் பற்றி விளக்கம் அளித்தது.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சர்வதேச அளவில் சுகாதார மேம்பாட்டிற்கும் இது இணையாக நடந்தது. அடுத்தகட்ட சமுதாய பொறுப்பின் கடமையாகவும் இது நடந்தது. தொழிலாளர் நலம், மிகவும் கடினமாக தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் காக்கவும், இந்த முகாம் நடந்தது.

முகாமிற்கு தொழிலாளர்களிடமிருந்தும், தொழில் நிறுவனங்களிடமிருந்தும், அமோக வரவேற்பு இருந்தது. ஒருங்கிணைந்து செயல்படவும், சுகாதாரமான முயற்சியை உருவாக்கவும், மேலும் தகவல்களை சமுதாயத்திற்கு அளிக்கவும் இது பேருதவியாக இருந்தது. இந்த முகாமை நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சூயஸ் இந்தியா மற்றும் வாசன் ஐ கேர் நடத்தின.

மேலும் படிக்க