• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறந்த தொழில் துறையினர்க்கான விருதுகள்

January 30, 2020

இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் கோவையில் சிறந்த தொழில்துறையினர்க்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக
கோயம்புத்தூரில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ,வர்த்தகம் தொழில் மற்றும் சேவைத் துறையை அதிகப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்திய தொழில்கள் வர்த்தக சபையின் கோவைக் கிளை சார்பில், வர்த்தகம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், ‘ஜி.கே. சுந்தரம் எட்டி விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வருடந்தோறும் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த வருடம் கோவை இந்திய வர்த்தக சபையின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறந்த தொழில்துறையினர்க்கான விருதுகள் கேபிஆர் குழுமம்,மகேஸ்வரி மார்பல்ஸ் மற்றும் கேஜி குழுமம் என மூன்று தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.மேலும் இதில் தொழில் நுணுக்கங்கள் பற்றி எடுத்துறைக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் தொழில் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க