• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்

August 1, 2020 தண்டோரா குழு

கோவையில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.அதன்படி, பிறை தெரிவதை முன்னிட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

கோவையை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.வைரஸ் தாக்கத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவையில் இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் படிக்க