• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கணவரை நண்பர்களுடன் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

November 25, 2022 தண்டோரா குழு

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் சித்திரைவேல்.இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.அதே பகுதியில், அவருடைய அண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில்,வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால், சித்திரைவேல் வெள்ளலூருக்கு சென்று ராஜனை தட்டிக் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவருடைய மனைவி மனம் திருந்தி ராஜனை விட்டு பிரிந்து சித்திரவேலுடன் மீண்டும் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த ராஜன் தனது கள்ளக் காதலுக்கு சித்திரைவேல் இடையூறாக இருப்பதாக கருதி, தனது கூட்டாளிகளுடன் சென்று கடந்த 17.5.2020 ஆம் ஆண்டு அன்று வீட்டில் இருந்த சித்திரைவேலை தடியால் அடித்து கொலை செய்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து. ராஜன் அவருடைய கூட்டாளிகள் அரவிந்த், குமார், செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது, கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் படிக்க