• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கடந்த ஆண்டை விட விபத்துகளில் உயிரழிப்பு குறைந்து உள்ளது – மாவட்ட ஆட்சியர்

January 20, 2020

கடந்த ஆண்டை விட19.3 விழுக்காடாடுகள் சாலை விபத்துகளில் உயிரழிப்பு குறைந்து உள்ளது.31வது சாலை போக்குவரத்து வார விழாவை துவக்கி வைத்த பின் மாவட்ட ஆட்சியர் தகவல்.

31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி துவக்கி வைத்தார்.600கும் மேற்பட்ட இரு சக்கர வாகன பேரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி அவினாசி சாலை,மகளிர் தொழில்நுட்ப கல்லூரி,காந்திபுரம் வழியாக வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் சாலைகளில் சாகசம் வேண்டாம்,மித வேகம் மிக நன்று,தலை கவசம் உயிர் கவசம் போன்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.இந்த பேரணியில் காவல்துறையினர் அதி விரைவு படை,அனைதிந்தியசுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள்,பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,

போக்குவரத்து வார விழாவை முன்னிட்டு நாளை வாக்கத்தான் நிகழ்ச்சி, நாளை மறுதினம் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட உள்ளது. கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விதிமுறைகள் மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டை விட19.3 விழுக்காடாடுகள் சாலை விபத்துகளில் உயிரழிப்பு குறைந்துள்ளது. சென்ற ஆண்டு சாலை விபத்துகளால் 560 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் இந்த ஆண்டு 452 ஆக குறைந்து உள்ளது என்றார்.மேலும் வரும் ஆண்டு உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கபடும் என தெரிவித்தார்.சாலை பாதுகாப்பு குறித்து தொடர் கூட்டங்கள் நடத்தபட்டு வருவதாகவும் விதிமுறை மீறிய 3400 மேற்பட்ட வாகங்களுக்கு அபராதம் விதிக்கபட்டு உள்ளது என தெரிவித்தார்.தனியார் வாகனங்கள் மீது வரும் புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும் தொடர் தவறுகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சுமித் சரண்,மாநகர குற்றபிரிவு துனை ஆணையர் உமா,லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலிய பெருமாள்,மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்,வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல்,தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க