• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவையில் கஞ்சா வேட்டையில் 19 பேர் கைது

March 18, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு 19 பேரை கைது செய்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கஞ்சா வேட்டை நடைபெற்று ஒரே நாளில் 19 கஞ்சா குற்றவாளிகள் மீது 14 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3.240 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் எஸ்பி கடுமையாக எச்சரித்துள்ளார். போதைப் பொருட்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க