• Download mobile app
14 Aug 2022, SundayEdition - 2377
FLASH NEWS
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவையில் உள்ளூர் விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் இ காமர்ஸ் தளமான ஜிங்கிள் பிட் அறிமுகம்

June 28, 2022 தண்டோரா குழு

உள்ளூர் விற்பனையாளர்கள் அனைத்து முறைகளிலும் விற்பனையளாராக மிகவும் குறுகிய இடத்தில் உள்ள சந்தை·எளிதாக பயன்படுத்தும் வகையிலான டிஜிட்டல் ஸ்டோர் ஆகவும், செயற்கை நுண்ணறிவு கருவி கொண்டு தடையற்ற டிஜிட்டல் முறை மற்றும் தேவைகளை அறிவதோடு, விலையையும் அறிய முடியும்.

ஜிங்கிள்பிட்-ன் இலக்கு, ஆப்லைன் விற்பனையாளர்களுக்கு எதிர்காலத்திற்கு உதவும் வகையில் தயார்படுத்த, டிஜிட்டல் மையமாக்குதலாகும்.அவர்களது கையிருப்பையும்,ஆன்லைனில் அதிகம் இடம் பெறவும் வாய்ப்பளிப்பது ஆகும். வாங்வோருக்கு, கடையில் உள்ள அனைத்து பொருட்களின் விலையையும் அறிய தளத்தை ஏற்படுத்தி, இந்திய கடைகளில் ஒருமாற்றத்தை ஏற்படுத்துகிறது ஜிங்கிள்பிட்.

ஜிங்கிள் பிட் குறித்து அதன் நிர்வாகிகள் கிருஷ்ணன் நாரணப்பட்டி, சுதர்ஷன் பாபு, வெங்கடேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீவாஸ் அனந்தராமன் ஆகியோர் கூறுகையில்,

ஜிங்கிள்பிட், மே 2020ல் சென்னையில் துவக்கப்பட்டது.தற்போது இந்த செயலியை 4 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்4000 விற்பனையாளர்கள் உள்ளனர்.பிளே ஸ்டோரில் முதல் 100 செயலிகளில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் விநியோகவசதியை கொண்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஏஞ்சல் முதலீட்டாளர்களை பெற்று $700,000 நிதியை திரட்டியுள்ளது. தொற்றுகால பாதிப்பை எதிர்கொண்ட ஜிங்கிள்பிட்,தொற்று காலத்தில் வணிகத்தில் ஏற்பட்ட பாதிப்பு,பல அங்காடிகளுக்கு டிஜிட்டல்மயமாக்குதல் தேவையாக இருந்தது. இத்தகைய உள்ளூர் விற்பனை குழுக்களுக்கு,எளிதாகவும், விரைவாகவும் மற்றும் சிக்கனமான வழியில் உள்ளூர் இ வணிக அனுபவத்தை ஏற்படுத்தியது.

உள்ளூர் வணிகர்கள், புதிய டிஜிட்டல் வடிவிலான வணிக உலகை துவக்க இது வழிகாட்டியது.தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 20 ஆப்லைன் விற்பனையாளர்கள் வெளியேறி வருகின்றனர், இது தினமும் அதிகரித்து வருகிறது. ஜிங்கிள்பிட்,இவர்கள் தொடர்ந்து நிலைக்க உதவி செய்வதோடு, புதிய டிஜிட்டல் காலத்தில் அவரவர் சொந்த பெயரை வலுவாக்குகிறது. தற்போது, மொபைல் போன், அதன் உதிரி பாகங்கள், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ், பயன்பாட்டு பொருட்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினி உதிரிபாகங்களாகும்.

சமீபத்தில் வாகன பராமரிப்பு பொருட்கள் மற்றும் வாழ்வியல் தயாரிப்புகள் போன்றவைகளையும் இணைத்துள்ளன.500க்கும் மேற்பட்ட பொருட்கள் ஜிங்கிள் பிட்டில் இணைக்கப்பட்டுள்ளன.ஜிங்கிள்பிட் சென்னையை மையமாக வைத்து செயல்பட்டாலும், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் சேவையாற்றி வருகிறது.கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூர் இ வணிக விற்பனையை திறம்பட ஏற்படுத்தி, இரண்டாம் நிலை நகரங்களில் நுழைந்துள்ளது.

தற்போது, கோவையில் வசிப்போர் சிறப்பான விலையில்,விரைவாக பொருட்களை இ வணிகமுறையில் பெற முடியும். உள்ளூரில் விரைவாக வாங்கும் அனுபவத்தை பெற முடியும்.
ஜிங்கிள்பிட், விற்பனையாளர்கள் நல்வாழ்வை இலக்காக கொண்டுள்ளது. தனித்துவமிக்க அணுகுமுறையால் சென்னையில் உள்ள பல சிறுவிற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலையை கோவையிலும் ஏற்படுத்தவுள்ளது.

ஜிங்கிள்பிட்உடன் பங்குதாரராக மாறிய பல சென்னையை சேர்ந்த விற்பனையாளர்கள், தங்களது மாதாந்திர விற்பனையில் 30%உயர்வு பெற்றுள்ளனர். தொற்றுக்கு பின் சில்லறை விற்பனையில் ஏற்பட்ட மாற்றம் இது. அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஆஸ்டின்,ஜிங்கிள்பிட் ஐ, அதன் புதிய சிப் விரைவு திட்டத்தால் ஒரு வளமான ஸ்டார்ட் அப் ஆக தேர்வு செய்துள்ளது. இந்த திட்டம் நிறுவனரால் துவங்கப்பட்டுள்ளது.

பங்குதாரர் இல்லாத, ஒரு ஸ்டார்ட் அப் தொடரின் முதல் துவக்கமாக, வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாக இருக்கும், என்றனர்.

மேலும் படிக்க