• Download mobile app
19 May 2019, SundayEdition - 1194
FLASH NEWS
  • ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தவர் கைது
  • உத்தரபிரதேசம் : டிராக்டர் மீது பேருந்து மோதி 5 பேர் பலி
  • விளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்

கோவையில் உலக அமைதி வேண்டி மகா யாகம், ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு

May 13, 2019 தண்டோரா குழு

ஸ்ரீ ஆனந்த கல்பகா பவுண்டேசன் சார்பில் உலக அமைதி வேண்டி மகா யாகம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன்
பகவத் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார்.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரி ஆதினத்தில் உலக அமைதி வேண்டி மகா யாகம் நடைபெற்றது. உலகில் மழை வேண்டியும், இயற்கை வளம் சிறக்கவும் ,பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து அப்பாவி பொதுமக்களை காக்கவும் என உலக அமைதிக்காக நடைபெற்ற இந்த யாக வேள்வியில் ஸ்ரீ ஆனந்த கல்பக பவுண்டேசன் நிறுவனர் ஈஸ்வரன், மகேந்திரன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, 50 வது ஆண்டை பூர்த்தி செய்து நடைபெற்ற பொன்விழாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கலந்து
கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பக்தர்கள் பயனடையும் விதமாக ஆதினத்தின் முழு விவரங்கள் அடங்கிய வலைதள பக்கத்தையும் வெளியிட்டார்.

மேலும் படிக்க