• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவையில் இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய கிளப் துவக்கம்

March 18, 2023 தண்டோரா குழு

இன்னர் வீல் கிளப் சமுதாயம் சேர்ந்த சேவைப்பணிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு பல்வேறு சேவைத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் வெஸ்ட் 320 மாவட்டத்தின் கீழ் இன்னர் வீல் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய கிளப்பின் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பீளமேட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் ஆஷா சுனில், மாவட்ட இ.எஸ்.ஓ.சிந்து சேது ஆகியோர் கலந்து கொண்டனர்.24 பெண் உறுப்பினர்களை கொண்டு செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரியா ராம்குமார், செயலாளராக அசோக் சங்கீதா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். பல்வேறு சேவை திட்டங்களை முன்னெடுத்து செயல்பட இன்னர்வீல் கோயமுத்தூர் சினெர்ஜி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து இன்னர் வீல் கிளப் கோயம்புத்தூர் சினேர்ஜி தலைவர் பிரியா ராம்குமார் பேசுகையில்,

இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் வெஸ்ட் 320 மாவட்டத்தின் கீழ் இன்னர் வீல் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய கிளப்பின் 24 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். எங்கள் கிளப்பில் முதல் சேவை திட்டமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலையான களரி, அடிமுறை, கராத்தே ஆகிய பயிற்சிகளை வேர்ல்டு களரி, அடிமுறை ஃபெடரேஷன் மற்றும் அட்வென்சர் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியோருடன் இணைந்து இலவசமாக ஒரு வருடம் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் வெஸ்ட் தலைவர் மாதுரி ரவீந்திர குமார், செயலாளர் பத்ம ராணி ரவிச்சந்திரன், இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் சினேர்ஜி துணைத் தலைவர் சீதாலட்சுமி, பொருளாளர் மது ஷாலினி, மற்றும் நிர்வாகிகள் அனுராதா, சரஸ்வதி மகேஷ், லட்சுமி பிரியா, ரம்யா செந்தில், இன்னர் வீல் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க