• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆதிகுடி மக்களுக்கு உணவு நிவாரண பொருட்களை வழங்கிய திமுகவினர்

July 21, 2021 தண்டோரா குழு

கோவையில் ஆதிகுடி மக்களுக்கு உணவு நிவாரண பொருட்களை திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினார்.

மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், மருதமலை சேனாதிபதி அவர்களின் அனுமதியுடன் இன்று கோவை கிழக்கு மாவட்ட கிணத்துக்கடவு (ம) ஒன்றியம் திருமலையம்பாளையம் பேருர் கழகத்திற்குட்பட்ட முனியப்பன்பதி ஆதிகுடி மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களும் மற்றும் கால் செயலிழந்து இருக்கும் பெண்மணிக்கு மருத்துவ செலவுக்கு நிதி உதவி,மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு ஒன்றிய பொறுப்பாளர் கே.கே செந்தில்குமார்,பேருர் கழக செயலாளர் ஆர் ராமராஜ்,பொதுக்குழு உறுப்பினர் சே.நடராஜன் கோவை கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரா. கமலம் தொண்டரணி அமைப்பாளர் பரிமளாராணி மற்றும் துணை அமைப்பாளர்களுடன் கலந்து கொண்டார்கள்.

மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள்,நிவாரணப் பணிகள், உணவு வழங்குதல்,மருத்துவ பணிகள், ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க