• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அதிநவீன வசதியுடன் மிராஜ் சினிமாஸ் மல்டிபிளக்ஸ் சினிமாஸ் துவக்கம்

January 11, 2021 தண்டோரா குழு

மாபெரும் திரையில் திரைப்படங்களை காணும் அனுபவத்தை தரும் வகையில் மிராஜ் சினிமாஸ், 50வது திரையரங்குகளை கோயம்புத்தூரில் துவக்கி, தமிழ்நாட்டில் நுழைகிறது.

இந்த புதிய எஸ்ஆர்கே – மிராஜ் சினிமாஸ் கோயம்புத்தூரில் ஒண்டிப்பபுதூர் மேம்பாலம் அருகே அமைந்துள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்துடன் துவங்குகிறது.
SRK- மிராஜ் மல்டிபிளக்ஸ்சில் 5 அரங்குகளில் 1257 இருக்கைகள் வசதி
செய்யப்பட்டுள்ளது.இதில் அமைக்கப்பட்டுள்ள லேசர் புரஜெக்டர் ஈடு இணையற்ற தெளிவான படத்தை தரவல்லது.கூடுதலாக உலகத்தரம் வாய்ந்த 3D பரிமாணத்தையும் கொண்டுள்ளது. டால்பி சூழலில்,சீரான ஒலியில் அருமையான படம் காணும் அனுபவத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் படத்தை காண்பதுடன், ருசியாக சாப்பிட உடனடியாக சமைத்து வழங்கும் சமையலறையும் உண்டு, இந்திய, சீன உணவு வகைகள் மட்டுமின்றி, சர்வதேச உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.

மிராஜ் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் அமித்சர்மா புதிய தியேட்டரை துவக்கி வைத்து பேசுகையில்,

நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் மாபெரும் திரையில் திரைப்படங்களை காணும் அனுபவம் கிடைத்துள்ளது. எங்களது புதிய திரையரங்கில், துல்லியமான தெளிவான படம் காணும் சிறந்த அனுபவத்தை பெரும்வகையில் நவீனமயமான திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மட்டுமின்றி,சென்னையிலும் நான்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளை அமைத்து தமிழ்நாட்டில் தனது
விரிவாக்கத்தை மிராஜ் சினிமாஸ் மேற்கொண்டுள்ளது.குடும்பத்தினர், நண்பர்களுடன் திரைப்படங்களை கண்டு களிக்கும் வக்கயில் தேவையான அனைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.

கற்பகம் தியேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சிவப்பிரகாசம் கூறுகையில்,

மிராஜ் சினிமாவுடன் இணைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி கோவையில் உள்ள ஒவ்வொரு திரைப்பட ரசிகரையும் இந்த அரங்கு திருப்திபடுத்தும் என்றார்.

கோவிட்ட 19 தொற்று சூழலை கருத்தில் கொண்டு பாதுகாப்பையும்
சுகாதாரத்தையும் பேணும் வகையில் கட்டுப்பாட்டுகளையும் பின்பற்றுகிறது. ஒவ்வொரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், கூட்டத்தை தவிர்க்க டிக்கெட் இல்லா நுழைவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. காட்சி முடிந்ததும் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளித்தல், முன்பே தயார்நிலைப் படுத்தப்பட்ட உணவு மற்றும் தொடாமல் தொகை செலுத்தும் வசதி போன்றவை, மனதிற்கு நிம்மதியை தரும் வகையில் அமைத்துள்ளனர்.

மிராஜ் சினிமாஸ் துணைத்தலைவர் புவனேஷ் மெண்டரிட்டா கூறுகையில்,

எங்களது விரைவான வேகமான விரிவாக்கம், நம் நாட்டில் வரும் ஆண்டுகளில், ஒரு முன்னணி திரையரங்கு நிறுவனமாக உருவாக வேண்டும் என்ற இலக்கை அடைவது தான், என்றார்.

தற்போது மிராஜ் சினிமாஸ் மல்டிபஇளக்ஸ் 14 மாநிலங்களில், 35 நகரங்களில் 114 திரைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க