• Download mobile app
11 Jul 2025, FridayEdition - 3439
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையிலுள்ள பிரபலமான பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

January 28, 2025 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் உள்ள சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வி.ஜி.பி.உலகத்தமிழ் சங்கத்தின் 176வது திருவள்ளுவர் சிலைத்திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.பி. உலகத்தமிழ் சங்கத்தலைவர் செவாலியர் கலைமாமணி விருதுகளைப் பெற்ற வி.ஜி.பி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் அவர்கள் திருவள்ளுவரின் திருவுருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் அறம், பொருள், இன்பம், ஆகிய தனி மனித வாழ்க்கை ஒழுக்க நெறியை உணர்த்தும் முப்பாலை அருளிய திருவள்ளுவரின் திருவுருவச்சிலை எங்கள் பள்ளியில் அமைத்ததற்கு நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம், அதே சமயம் எங்களது பள்ளி மாணவ, மாணவிகள் மேலும் நற்பண்புகளை வளர்த்தி கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சந்தானகோபால்,சுனிதா சந்தானகோபால், உமாராணிராஜேந்திரன்,பள்ளியின் அறங்காவலர்கள் ரவிந்திரன், கீதாரவீந்திரன்,சுதர்ஷன், ராஜலட்சுமிசுதர்ஷன்,விஜயகிருஷ்ணா, நிரஞ்சனிவிஜயகிருஷ்ணா மற்றும் பள்ளியின் முதல்வர் கருணாநிதி, பள்ளியின் துணை முதல்வர் யோகிதா, பள்ளி ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க