• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும் – அமைச்சர் முத்துச்சாமி

July 19, 2021 தண்டோரா குழு

வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக இனி எதுவும் இருக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

என்னென்ன பணிகளில் மாற்றம் செய்ய வேண்டும் துரிதப்படுத்த வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல துணை நகரங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. துணை நகரங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறியவர் மாடல் நகரமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாக கூறினார்.

அதேபோல ஆட்டோ நகரங்களை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பெருந்துறை திருச்செங்கோடு பகுதிகளில் இந்த நகரங்களை உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால் மாற்று இடங்களில் கட்டிடங்கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது எனவும், பத்திர பதிவு செய்யாமல் டாக்குமெண்ட் கொடுக்கப்படாமல் இருப்பவர்களுக்கு விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இருக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என தெரிவித்த அவர், சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். ஏற்கனவே கோவை மாஸ்டர் பிளான் 1211 சதுர கிலோ மீட்டராக உள்ள நிலையில், கூடுதலாக ஆயிரத்து 558 சதுர கிலோ மீட்டர்கள் சேர்க்கப்பட உள்ளது எனவும் புதிய மாஸ்டர் பிளான் ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் தவறுகள் நடந்திருந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க