• Download mobile app
10 Dec 2023, SundayEdition - 2860
FLASH NEWS
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம்

November 17, 2023 தண்டோரா குழு

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இதில் புற்றுநோய் மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் அமைப்பின் கீழ் உள்ள ரோட்டரி அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் அவினாசி சாலையில் உள்ள இந்திய வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் விஜய் பாலசுந்தரம்,செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ராவ் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஆஷா ராவ் மற்றும் பி.ஆர்.ஜே.மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பேசிய மருத்துவர் ஆஷா ராவ்,

ஆண்கள் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் புற்று நோயின் தாக்கம் குறித்தும் அதனை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்.குறிப்பாக புற்று நோய் வராமல் பாதுகாத்து கொள்வதற்கான தடுப்பூசிகள் குறித்தும், பெண்கள் புற்றுநோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதும் குறித்தும் அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் சதீஷ் குமார்,தற்போது எலும்பு தொடர்பான சிகிச்சையில் வந்துள்ள பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.எலும்பு தேய்மானம் அதனால் வரும் பாதிப்புகள் அதனை தடுக்கும் முறைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். எலும்பு தொடர்பான நோய் மற்றும் சிகிச்சை முறைகள்,புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு என நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் கோவை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க