• Download mobile app
15 Oct 2025, WednesdayEdition - 3535
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை

September 16, 2020 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை காட்டுயானை வழிமறித்தன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன குறிப்பாக யானை காட்டெருமை புலி கரடி சிறுத்தை மான் போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மூன்று காட்டு யானைகள் கோத்தகிரி முதலாவது கொண்டை ஊசி வளைவில் ஒய்யாரமாக சாலையில் உள்ள மரக் கிளைகளை உடைத்து பசியாற்றி கொண்டது இதனால் அந்த வழியில் சென்ற வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க