• Download mobile app
10 Dec 2023, SundayEdition - 2860
FLASH NEWS
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொள்ளையடித்தவனுக்கு 7ஆண்டு சிறை, ரூ. 5000 அபராதம் விதிப்பு

January 24, 2023

கொள்ளையடித்த நபருக்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஹக்கிம் என்ற டோரி ஹக்கிம்(35) மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று ஹக்கிம் என்ற டோரிஹக்கிம்-க்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் ஆகியவர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

மேலும் படிக்க