• Download mobile app
02 Jul 2020, ThursdayEdition - 1604
FLASH NEWS
 • கொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி
 • கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு!
 • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
 • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..!
 • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..!
 • சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு !
 • கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை!
 • நாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி!
 • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 • ஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
 • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
 • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
 • ஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை?
 • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
 • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
 • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
 • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
 • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
 • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
 • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கொடி கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

November 12, 2019

கொடி கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தின் அரசின் திட்ட பணிகளுக்காக எங்குமே நிலம் எடுக்க முடிவதில்லை. எதிர்ப்பு, போராட்டம், வழக்குகளால் சாலை விரிவாக்கம், மின்கோபுரம் உள்ளிட்டவை அமைப்பதில் கால தாமதமாகிறது.

நாட்டில் உள்ள கிராமங்கள், மக்கள் பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்த அடிப்படையே தெரியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் கமல்.

அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்கட்டும் என்றுதான் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர். சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான். கால அவகாசம் குறைவு என்பதால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்ப மனு பெறப்படுகிறது.

வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும், கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து பெண் ஒருவர் காயமடைந்தது குறித்த கேள்விக்கு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இதுவரை இல்லையே என்று பதிலளித்தார்.

மேலும் படிக்க